முகம் சிவந்த ஓர் தீர்க்கதரிசி A BLUSHING PROPHET Jeffersonville, Indiana, USA 56-11-25E 1. "முகம் சிவந்த ஓர் தீர்க்கதரிசி" என்ற பொருளின் பேரில் கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இந்த காலைப்பொழுதில் "மற்றவர் உபயோகித்த (second handed) அங்கி அணிந்த தீர்க்கதரிசியைக்" குறித்துப் பார்த்ததில் நிச்சயமாகவே நாம் சற்று ஈர்க்கப்பட்டோம். காலையில் பார்த்த வசனத்தின்படியாக நாமும் கூட மற்றவர் உபயோகித்த அங்கியையே அணிந்தவர்களாக இருக்கிறோம் என்று இந்த இரவுப்பொழுதில் அறிந்திருக்கிறோம். இது மற்றவர் உபயோகித்த அங்கியாக இருக்கிறதினால் நான் மிகுந்த சந்தோஷமடைகிறேன். ஏனென்றால் நாம் அணிந்திருக்கும் இந்த அங்கி கிறிஸ்து இயேசுவின் மூலமாக தேவனுக்கு நீதியாக எண்ணப்பட்டிருக்கிறது. அற்புதங்களின் நாட்கள் எல்லாம் முடிந்துபோயின பரிசுத்த ஆவியானவர் சர்வ வியாபி இல்லை என்று சொல்லுகிற வேத பாண்டித்தியத்தை நாம் எடுத்துக்கொள்ளவில்லை. அவைகள் பொட்டு பூச்சியினால் அரிக்கப்பட்ட மனித வேத பாண்டித்தி யத்தினால் அதாவது பொட்டு மற்றும் சில் வண்டு பூச்சியினால் அரிக்கப்பட்ட அங்கியாய் இருக்கிறது. ஆனால் நாமோ கர்த்தருடைய நீதியின் அங்கியை அணிந்தவர்களாய் இருக்கிறோம். 2.இது நம்முடைய சொந்த திறமையால் உண்டானது அல்ல; ஆனால் இயேசு கிறிஸ்துவின் திறமையால் கூடினது. இன்னும் அந்த யோர்தான் அண்டையில் நான் வரும்போது அவருடைய அங்கியை நம்பினவனாக, அவருடைய அங்கியை உடையவனாக இருக்கவே விரும்புகிறேன், யாவருக்கும் மரணம் என்று அழைக்கின்ற அந்த பெரிய நிழலாகிய வாசல் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு முறை இருதயத்துடிப்பின் போதும் அந்த பெரிய இடைவெளியில் நம்முடைய ஒருதுடிப்பு நெருங்கிச் செல்லும்படி ஒவ்வொரு மனிதனுக்கும் பெண்மனிக்கும் வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது விசுவாசிகளாகிய உங்களோடு அந்த இடைவெளியில் வரும்போது, ஏதோ சாதித்து விட்டேன் என்ற மனதோடும், சிந்தையோடும் வருவதில்லை என்று நினைக்கும் போது நிச்சயமாகவே சந்தோஷமடைகிறேன். நான் ஒரு பாவி என்று அறிந்து அறிக்கை செய்தவனாய் அங்கே போகிறேன். அவருடைய நீதியின் அங்கியினால் நான் சுற்றப்பட விரும்புகிறேன் என்று அறிந்தவனாய் கடந்து போகிறேன். மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவரை அறிந்திருக்கிறேன் என்ற சாட்சியோடும், அவர் என்னை அழைக்கும் போது மரித்தோரிலிருந்து நான் வெளியே வர விரும்புகிறேன் என்ற எண்ணத்தோடும் போகிறேன். 3.இப்பொழுது பல நூறு வருடங்களுக்கு முன்பாக எலியாவின் நாட்களில் ஒன்றில் நடந்த இஸ்ரவேலின் சம்பவத்தைக் குறித்த காட்சியை நமக்குப் பாடப் பொருளாக இன்று இரவில் நாடக வடிவில் அமைக்கலாம். இஸ்ரவேல் ஆட்சியில் அநேக ஏற்றத் தாழ்வுகளும் இருந்தன. இன்றிரவு அந்தக் காட்சியில் நாம்... அங்கே காட்சியிலுள்ள தீர்க்கதரிசிகளின் பள்ளிகள் தீர்க்கதரிசிகளைப் போன்று அதிகமாகப் பாவனை செய்து மாம்சப்பிரகாரமாக நடந்து கொள்ளும்படி பயிற்சியளித்தன. தேவனுடைய வல்லமையை அறிந்துகொள்ள இயலாதவாறு எவ்வளவு சாதாரணமானவர்களாக இருந்தனர். தேவனுடைய வல்லமையானது எலியாவைத் தூக்கிச் சென்று மலைப்பகுதியில் எங்கோ எறிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்தனர். எலியாவைக் கண்டுபிடிக்கும்படி தேடும் குழுவை அவர்கள் அனுப்பியபோது எலிசாவோ தேவன் அவனை மகிமைக்கு எடுத்துக் கொண்டார் என்று நன்றாகவும், திட்டவட்டமாகவும் அறிந்திருந்தான். அக்கினிமயமான இரதத்துடனும், அக்கினி மயமான குதிரைகளுடனும் வீட்டிற்குச் செல்ல, மரணத்திற்குத் தப்பி தேவனிடம் செல்ல அவன் காணப்படாமற்போகும்படி தேவன் அவனை எடுத்துக்கொண்டார். அவர்களுடைய சொந்த வேதக்கல்லூரிகளின் வேதபாண்டித்தியம் கிரியை செய்யவில்லை. ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பதற்கு தேவனுடைய அழைப்பும், தெரிந்துக்கொள்ளுதலும் தேவையாக உள்ளது. 4.இப்பொழுது இன்றிரவு இஸ்ரவேலை ஒரு பின்மாற்றத்தின் நிலையில் காண்கிறோம். இஸ்ரவேலுக்கு ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. அது இன்றைக்கு இருக்கின்ற சபைக்கு அடையாளமாக இருந்தது. சில நேரங்களில் அவர்கள் வீட்டின்மேல் இருக்கிறதைப் போலவும், அடுத்த நேரம் பள்ளத்தாக்கில் இருக்கிறதைப் போலவும் இருந்தார்கள். இவ்விதமான காரியங்கள் தான் நன்மையான காரியங்களை நாம் மெச்சிக்கொள்ளும்படி செய்கிறது. அதைத்தான் "வேறுபடுத்திக் காட்டுகின்ற சட்டம்" என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள கருப்பு நிறமுடைய மனிதன் தான் கருப்பு தோல் உடையவன் என்று டேவிட் லிவிங்ஸ்டன் வரும் வரை அவன் அறியவில்லை. டேவிட் லிவிங்ஸ்டன் வெள்ளையராக இருந்ததினால் தான், தான் கருப்பு இனத்தவன் என்று உணர்ந்தான். இதுவே வேறுபடுத்திக் காட்டுகின்ற காரியமாகும். நீங்கள் இரவைக் கொண்டிருக்கவில்லை என்றால் ஒருபோதும் பகலை மெச்சிக்கொள்ளமாட்டீர்கள். ஒரு மேகமூட்டமான நாள் இல்லாத பட்சத்தில் சூரிய ஒளியை ஒருபோதும் மெச்சிக்கொள்ள அறியாமல் இருப்பீர்கள். அநீதி இல்லாவிட்டால் நீதியை ஒருபோதும் மெச்சிக்கொள்ள அறியாமல் இருப்பீர்கள். ஆரோக்கியமற்ற உடல்நிலை அல்லது சுகவீனம் இல்லாத பட்சத்தில் ஒருபோதும் ஆரோக்கியமுள்ள உடல்நிலையை மெச்சிக்கொள்ள அறியாமல் இருப்பீர்கள். ஆகையால் தான் நாம் பரலோகத்தை அவ்வளவாக மெச்சிக்கொள்வோம் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நாம் பூமியின் மேலாக ஒரு விசை ஜீவித்ததின் நிமித்தமே. வேறுபாட்டின் சட்டத்தை நான் நினைக்கும்போது; பரிசுத்தஆவி என்கிற அப்படிப்பட்ட ஒன்று இல்லை என்று சொல்கிற சபையில் நாம் அதிக காலம் ஜீவித்ததுதான், இன்றிரவு பரிசுத்தஆவியை அவ்வளவு அதிகமாக நாம் மெச்சிக்கொள்ளக் காரணமாயிற்று. நாம் இன்றிரவு அதை மெச்சிக்கொள்வதற்கு நாம் மறுபக்கத்தை உடையவர்களாய் இருந்ததே காரணமாகும். அந்த விதமாக அது இருக்க வேண்டுமென்று தேவன் அமைத்துள்ளார். ஏனென்றால் அவருடைய ஜனங்கள் தங்களுடைய நிலையில் மேலும், கீழுமாகவே உள்ளனர். நீங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இருந்திராவிட்டால் ஒரு மலை உச்சியைப் பாராட்ட ஒருபோதும் அறியமாட்டீர்கள். ஏதாவது ஒரு சமயத்தில் மோசமான தண்ணீரைக் குடித்திராவிட்டால் நல்ல தண்ணீரைப் பாராட்ட ஒருபோதும் அறியமாட்டீர்கள். மேலும் நீங்கள்... நீங்கள்... இவைகள் யாவும் வேறுபாட்டுச் சட்டத்தின்படியாகவே உள்ளன. 5.இப்பொழுது இஸ்ரவேல் பின்மாற்றத்தின் நிலைமையில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று பாருங்கள். இஸ்ரவேல் தேர்வு செய்யப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமாக இருந்தனர். தேவன் இஸ்ரவேலரை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அதாவது இஸ்ரவேலர்களுடைய இரத்தம் (வம்சம்) மிக பரிசுத்தமாக இருக்கும்படிக்கு தெரிந்துகொண்டார். ஏனென்றால் அந்த சந்ததியாரின் மூலமாகத் தாமே மேசியாவாக வரவிருந்தார். பழைய ஏற்பாட்டின் காலம் முழுவதிலுமாக தேவன் மனிதர்களில் காணப்பட்டார். ஆபிரகாமில் ஒரு நம்பிக்கையுள்ள விசுவாசியாக தன்னைக் காண்பித்தார். தாவீதில் ஒரு ராஜாவாக தன்னைக் காண்பித்தார். யோசேப்பில் நீதிபரராகக் காணப்பட்டார். மோசேயில் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறவராகவும் காணப்பட்டார். இப்படியாக காலங்களினூடாக தன்னை தீர்க்கதரிசிகளில் காண்பித்தார். அவர் எப்பொழுதுமே மனிதருக்குள்ளாக தன்னைப் பங்கு, பங்காக, தீர்க்கதரிசிகளாக, ராஜாக்களாக, ஆசாரியனாக, நியாயபிரமாணிகளாக, இன்னும் அது போன்று மனிதனுக்குள் தன்னையே காண்பித்தார். ஆனால் முடிவில் இந்த ஆவியானது தான் இளைப்பாறும்படி ஒரு இடத்தை கண்டடைய வேண்டும் என்பதை அறிந்ததாய் தேவத்துவத்தின் பரிபூரணத்துடன் அவர் கிறிஸ்துவுக்குள் சரீரப்பிரகாரமாக வாசமானார். எலியாவில் அவர் தேவ நீதியைச் செய்கிற மனுஷனாக இருந்தார். அவன் தேவ நீதியைச் செய்து நிறைவேற்றினான். மோசேயில் நியாயப்பிரமாணத்தைத் தந்தார், நீ அதைக் கடைப்பிடிக்க அல்லது வெளியேறிட வேண்டும். இவை எல்லாவற்றிலும் தேவன் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தினார் ஆனால் அவர் கிறிஸ்துவண்டை வந்த போது அவர் ஒரு பரிபூரணரானார். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் கிறிஸ்துவுக்குள்ளாக சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்தது. 6.மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தகப்பன் இல்லாதவராய், தாய் இல்லாதவராய், நாட்களின் துவக்கம் இல்லாமலும் வருடங்களின் முடிவு இல்லாமலும் அல்லது ஜீவனின் முடிவு இல்லாமலும் தேவன் தாமே தனது பரிபூரணத்தில் முன்னமாகவே ஒரு விசை ஆதியாகமத்தில் பிரதிநிதித்துவமானார். அவர் ஒரு ஆசாரியனாக, சாலேமின் ராஜாவாக, நாட்களின் துவக்கமும் அதன் முடிவும் இல்லாமல் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன் உருவமாக (Prefigure) அவர் இருந்தாரேயன்றி வேறொன்றும் இல்லை. ஏனென்றால் அவரே சாலேமின் ராஜா, அதற்கு சமாதானத்தின் ராஜா என்றும், எருசலேமின் ராஜா என்றும் பொருளாகும். கோத்திரப் பிதா ஆபிரகாம் அவரிடம் தசமபாகம் செலுத்திய போதும் கூட அவர் முன் இருந்தார். அவரே வரப்போகிற கர்த்தராகிய இயேசுவுக்கு முன் உருவமாக (முன் அடையாளமாக) இருந்தார். இந்த மெல்கிசேதேக்குதான் சோதோம் கொமோரா அழிவதற்கு முன்பாக ஆபிரகாமை சமபூமியிலே சந்தித்தார். அவர் மறுபடியும் சோதோம் கொமோரா அழிவிற்குப்பிறகு அவனைச் சந்தித்தபோது, அவன் அந்த ராஜாவினிடத்திலிருந்து கொண்டு வந்த பொருட்களிலிருந்து அவருக்கு தசமபாகத்தைச் செலுத்தினான். இவை எல்லாமுமே வரப்போகிற கிறிஸ்துவுக்கு அடையாளமாகவும் நிழலாகவும் இருந்தது. இப்பொழுது பழைய ஏற்பாட்டில் இருந்த பரிசுத்தவான்களின் ஏற்றத்தாழ்வுகளின் நிலைகளெல்லாம் நிழலாகவும், எடுத்துக்காட்டாகவும், அடையாளமாகவும் இந்த நாளுக்கென்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 7.இப்பொழுது இஸ்ரவேல் கலப்புத்திருமணம் செய்யக்கூடாது என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்களுடைய திருமணமானது அவர்களுக்குள்ளாகவே இருக்கவேண்டும். மற்றும், எந்த ஒரு இஸ்ரவேலனும் புறஜாதியாரை ஒருபோதும் திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் இரத்த ஓட்டத்தை (வம்சம்) எந்த கலப்பும் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்றும் கூட ஒரு சுத்தமான இரத்த ஓட்டம் இந்த பூமியின் மேலாக இருக்கும் என்றால் அது யூதனுடைய இரத்தமேயன்றி வேறு எதுவும் இல்லை என்று நம்புகிறேன். அவர்கள் இன்னுமாக மேசியாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே வந்தாயிற்று என்றும் நாம் கிறிஸ்துவின் மூலமாக மனந்திரும்பும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டது என்றும் அறிந்திருக்கிறோம். எஸ்றா அதிகாரத்திலிருந்த நாட்களின்போது, இஸ்ரவேலின் பிள்ளைகள் பின்மாற்றம் அடைந்த நிலையில் இருந்தார்கள். அவர்கள் மோவாபிய பெண்கள் மற்றும் அமோரியர், பெரிசியர் பெண்களையும், இன்னும் மற்ற தேசத்தாருடைய பெண்களையும் திருமணம் செய்துகொண்டது மாத்திரம் இல்லாமல், அவர்களோடு வேசித்தனத்தில் ஈடுபட்டு தங்களை அசுத்தப்படுத்தி ஜீவனைப் பிறப்பிக்கப் போகிற இரத்த ஓட்டத்தை மாசுபடுத்தினார்கள். இன்றைக்கு இருக்கிற சபைகளுக்கு எப்பேற்பட்ட காட்சியாக இது இருக்கிறது என்று பாருங்கள். நாம் ஜீவிக்கும்படியாக தேவனால் சபைக்குக் கொடுக்கப்பட்ட பண்டையகால பிரமாணங்களிலிருந்து எப்படியாக வழிவிலகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். சபையானது உலகத்தோடு வேசித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறது. உலகத்திற்குள்ளாக சென்று உலகத்தோடு காலத்தை வீணாக கழிக்கத் தொடங்கிவிட்டது. 8.இந்தக் காரியமானது தீர்க்கதரிசியை மிகவும் தர்மசங்கடமாக்கி, தேவனுடைய சமூகத்திறகு அவர் வந்த போது மிகுந்த வெட்கத்தோடு முகம் சிவந்து நின்றார். மக்களின் ஒழுக்க நெறி தவறிய முறையானது அவரை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தன்னைத்தானே அபிஷேகம் செய்து, மயிரையும், தாடியையும் பிடுங்கி, தேவனுக்கு முன்பாக மிகுந்த பாரத்தோடு ஜெபித்தார். மற்றும் சாயங்கால நேர பலியானது செலுத்தப்பட்டபோது, அவர் ஆலயத்துக்குள் பிரவேசித்து முழங்காலிலே நின்றபோது ஜனங்களின் பாவத்தினால் தேவனுக்கு முன்பாக அவருடைய முகம் சிவந்தது. சிவப்பு விளக்கு பகுதியில் நிர்வாணமாகச் சுற்றி திரிந்தவர்களுக்காக அவர் முகம் சிவக்கவில்லை. மற்றும் மோசமான இடத்தில் (பாதாள குழியில்) இருந்து சாராயம் குடிக்கிறவர்களுக்காக முகம் சிவக்கவில்லை. இதெல்லாம் மிகவும் மோசமாக இருக்கலாம். ஆனால்அவரோ தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடைய பாவத்தின் நிமித்தம் முகம் சிவந்தார். தங்களை தேவனுடைய ஜனங்கள் என்று அழைத்துக்கொண்டு, தாங்கள் விரும்புகிறபடி எல்லாம் செய்கின்ற ஜனங்களுடைய பாவத்தின் நிமித்தம் தேவனுடைய பிரசன்னத்தில் முகம் சிவந்துபோகிற, போதுமான அளவிற்கு தேவனைத் தங்கள் இருதயங்களில் பெற்ற, இன்னும் சில தீர்க்கத்தரிசிகளே இன்று நமக்குத் தேவை. நம்முடைய மக்களின் ஒழுக்கமானது... எப்பேற்பட்ட அபகீர்த்தியை நாம் இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். 9.பேசுவதற்கு இது சுலபமான பொருள் அல்ல. இதைக்காட்டிலும் சுலபமாய் இருக்கிற பொருளை என்னால் எடுக்கக்கூடும். ஆனால் சகோதரனே, நாம் ஜீவிக்கிறதான இந்த பாவமுள்ள, விபச்சாரமான காலத்திலே நிறங்களை வெளிப்படுத்தி யாரும் சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும்? யாராவது ஒருவர் இந்தக் காரியங்களைச் சொல்லியாக வேண்டும். யாராவது ஒருவர் மக்களுக்கு முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஒருவேளை எஸ்றா அப்படிச் செய்ய விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் காரியம் அவனுடைய மனதிலே இருந்தது. ஜனங்களுடைய அக்கிரமத்தினிமித்தம் தன்னுடைய முகம்சிவந்து, தன் கரங்களை மேலே உயர்த்தி, முகம்குப்புறவிழுந்து மிகுந்த உத்தமத்திற்குள்ளாகி தேவனிடத்தில் ஜெபிக்கிற ஒரு ஊழியக்காரனை நீங்கள் பார்க்கும்போது எழுப்புதல் துவங்குகிறதைக் காண்பீர்கள். மக்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் வந்து, அபிஷேகம் செய்து அவர்களை அசைக்கிற அளவிற்கு வல்லமை இல்லாதபட்சத்தில்,தேவனுடைய பிரசன்னத்தில் எந்த மனிதனும் அல்லது எந்த சபையும் மனந்திரும்புதலில் தரித்திருக்க முடியாது. அது அந்தவிதமாக இருந்தாக வேண்டும். இன்னொரு கேல்வின், நாக்ஸ், பின்னி, சான்கி, அல்லது ஜனங்களுக்காக பாரப்பட்டு, முகங்குப்புற விழுந்து, அழுது தேவனுக்கு முன்பாக ஜெபிக்கிற ஒரு நபரைக் காட்டுங்கள். மக்களுடைய அக்கிரமத்திற்காக இரவு முழுவதும் அழுது ஜெபித்ததினிமித்தம் கண்கள் வீங்கிப்போய், அடுத்த நாள் அவருடைய மனைவி அவரை மேசையினிடத்திற்கு கொண்டு வந்து காலை ஆகாரத்தை ஸ்பூனில் ஊட்டும் அளவிற்கு ஜெபித்த பாப்டிஸ்டு சபையிலிருந்த ஜான் ஸ்மித்தை மறுபடியும் அனுப்புங்கள், மற்றும் நெருப்பிலிருந்து வந்த தீப் பொறியைப் போன்று இருந்த ஒரு ஜான் வெஸ்லியை மறுபடியும் காண்பியுங்கள். நான் உங்களுக்கு எழுப்புதலைக் காட்டுவேன். 10.ஆனால் இன்று நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் தெரியுமா? முதுகில்தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தவிதமாக எழுப்புதல் இல்லாத பட்சத்தில் இதையும், அதையும், எழுப்புதல் என்று அழைக்கிறோம். அது சரியே. இது மக்கள் மத்தியில் பக்தி என்று அழைத்துக்கொண்டு உணர்ச்சி வசப்பட தூண்டிவிடுவதே ஆகும். அது எழுப்புதல் அல்ல. அந்நாட்களில் அவர்கள் இவ்விதமாக உணர்ச்சியைத் தூண்டுகிற பக்திவசப்படும் குழுவைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கோ ஓர் எழுப்புதல் வேண்டியதாக இருந்தது. என் அன்பான சகோதரனே சகோதரியே, ஏன் நம்முடைய தேசத்தின் நடத்தையானது இவ்வளவு சீர்கேடாக ஒருநாய் கூட வெட்கப்படுகிற அளவிற்கு இழிவானதாக இருக்கிறது? நம்முடைய மக்களின் சீர்கெட்ட நடத்தைகளை ஒரு வேட்டை நாய் செய்யும்படி நேரிட்டால் அது கூட வெட்கமடையும். நம்முடைய மக்கள் அனேக வருடங்களாகப் பெற்றிருந்த காரியங்களும் கூட, நம்முடைய தேசத்தார் செய்தயாவும், மக்கள் செய்த காரியங்கள் யாவற்றுக்கும் ஜெபக் குறைவே காரணமாய் இருக்கிறது. முன்பு இருந்ததான சபை, சினிமா நிகழ்ச்சிகளை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பிள்ளைகள் சினிமா நிகழ்ச்சிகளை பார்க்கும்படி அனுமதிக்கமாட்டார்கள். சினிமா நிகழ்ச்சிகளை விட்டொழிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கோ, தங்களுடைய சொந்த வீட்டிலேயே சினிமா படக்காட்சியை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் தொலைக்காட்சி பெட்டியை வைத்திருக்கிறது. இன்னுமாக எந்த இடத்தில் அவர்கள் மது அருந்துவது தவறு என்று நினைத்தார்களோ, எந்த இடத்தில் ஜான் பார்லிகார்னை குறித்து எப்பேர்ப்பட்ட அலங்காரமானவர் என்று பேசுவதற்கு வெறுக்கத்தக்கதாக நினைத்தார்களோ, இன்று அதே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிற அறுபது சதவீதத்தினர் வருடத்தில் ஒரு முறையாவது நட்பிற்காக மது அருந்துகிறார்கள். அதன்பிறகு கிறிஸ்துமஸ் நாட்களை கொண்டாடும்படிக்கு குடி வெறியர்களாகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இரட்சிப்பிற்கு பதிலாக கல்வியை எடுத்துக்கொண்டதே காரணம். அது அவர்களுக்கு ஒருபோதும் அதைப் பெற்றுத்தராது. நமக்கு எழுப்புதலே தேவையாக இருக்கிறது. 11.நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால் முதலாவது ஒரு பிளாஸ்திரி (bandage) போட்டு அதன்பின் அதை எடுத்துவிட்டு திரும்பவும் இன்னொரு பிளாஸ்திரி போட்டு அதை எடுத்து விடுகிறோம். இருப்பினும் வலியானது தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு தேவையானது சமுதாயசீர் திருத்தமோ அல்லது புத்திசாலித்தனமான பேச்சு சாதுரியமோ அல்ல. ஆனால் பண்டையகாலத்தில் இருந்ததுபோல் பரலோகத்திலிருந்து, தேவனால் அனுப்பப்பட்ட இரத்த மாற்றம் நமக்கு தேவை. இந்த பிளாஸ்திரி போடுவதெல்லாம் நமக்கு ஒரு நன்மையும் செய்யாது. ஏனென்றால் நமக்கு 'ரத்தசோகை" இருக்கிறது. ஆகையால் தான் இரத்தம் மாற்றப்பட வேண்டும். தேவனிடம் மனந்திரும்புதலுக்கு நேராக நம்மை அழைக்கும் அந்த பண்டையகால சுவிசேஷத்திற்கு நாம் திரும்பிவர வேண்டியவர்களாய் இருக்கிறோம். உலர்ந்த கண்களுடன் கைகளை குலுக்கும் கிரியை நமது தேவை அல்ல. ஆனால் ஒவ்வொரு மனித இருதயமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும் கிரியையையுடைய; தேவன் அனுப்பின பரிசுத்த ஆவியானவரின் எழுப்புதலே நமது தேவையாக இருக்கிறது. இந்த சபையிலே துவங்கி முழுதேசத்துக்கு பரவுகிற எழுப்புதலே நமக்குத் தேவையாக இருக்கிறது. இந்த விதமான எழுப்புதல் இல்லாவிட்டால் நாம் மரித்து விடுவோம்; நாம் இல்லாமற்போவோம் நாம் அழிந்துவிடுவோம். சிறுசிறு ஹாலிவுட் போன்று எழுப்புதல்களைக் கண்டு நான் மிகவும் வெறுப்படைந்தும், சோர்ந்துபோயும் இருக்கிறேன். இது மக்களை இரண்டு மணி நேரம் அல்லது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரங்களுக்கு உணர்ச்சியைக் கொண்டிருக்கத்தூண்டும். அவ்வளவுதான் சகோதரனே. நீங்கள் ஒரு எழுப்புதலினால் தூண்டப்பட்டு ஏதோ ஒரு விதமான உணர்ச்சியைப் பெறலாம் ஒரு விதமான நல் எண்ணத்தைப் பெறலாம். இவை எல்லாமே நல்லது தான். ஆனால் இன்றைக்கு நமக்கு தேவையானது அது அல்ல. உணர்வுகளையும் புத்திகூர்மையான காரியங்களையும் கண்ணோட்டங்களையும், பழக்கவழக்கங்களையும், மக்களுடைய ஜீவியங்களையும் திருப்பி மறுபடியுமாக சரியான பாதைக்குக்கொண்டுவருகிற பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவை. கல்வாரியிலிருந்து வருகிற இரத்த மாறுதலைத்தவிர்த்து எந்த சீர்திருத்தமும் ஒரு நன்மையும் செய்யாது. 12.நமக்கு ஐக்கிய நாடுகள் (U.N.) எல்லாம் தேவையில்லை. இங்கே நாம் பெற்றுள்ள ஐக்கியநாடு என்ன செய்தது என்று பாருங்கள்? அங்கே தேவனுடைய நாமம் அழைக்கப்படவில்லை. அவர்கள் அப்படி அழைக்க பயப்படுகிறார்கள். ஒரு சமயம் சில மதகுருமார்கள் அவர்களிடம்(U.N) சென்று "நீங்கள் ஏன் ஜெபத்தை ஏறெடுப்பதில்லை என்று கேட்டார்கள்". அதற்கு அவர்கள் அது தேவனை விசுவாசியாத சிலரைப் புண்படுத்திவிடும் என்று சொன்னார்கள். ஓ‚ நமக்குத் தேவையெல்லாம் ஒரு எழுப்புதலே. அது யாரை புண்படுத்தும் என்பதெல்லாம் காரியம் அல்ல. நாம் இந்த சுவிசேஷத்தை பிரசங்கித்து நம்முடைய உண்மையான நிறத்தைக் காட்டவேண்டும். அது சரியே. தேவனைக் கொண்டிராத எந்த ஒரு திட்டத்திற்கும் ஒரு பைசா கூட நான் தரமாட்டேன். அது ஐக்கிய நாடாக இருக்கட்டும் அல்லது நான்கு நாடுகள் குழுவாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் சரி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லாமல் நாம் மரித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுக்கு இந்த தேசம் விழிப்படையும் வரை, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் நாம் மரித்துக்கொண்டிப்பதற்கான காரணத்தை அறியும்படி விழிப்படையும் வரை... தேவன் கல்வாரியில் நமக்கு கொடுத்த அசலான அந்த வழியை, நிவாரணத்தை, சுகமாகுதலை விட்டதே நாம் மரிப்பதற்குக் காரணம். 13.இது ஒரு மனிதனை முகம் சிவக்கச் செய்யுமானால் அதில் வியப்பொன்றும் இல்லை. ஒரு உண்மையான பிரசங்கி தன்னுடைய சபையாரைக் கவனித்து, அவர்களை தேவனுடைய சிங்காசனத்துக்கு நேராக வழி நடத்திட முயற்சித்து, அவர்களுடைய வீடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுது, அவர்கள் புகை பிடிக்கிறதையும், ஒருவருக்கொருவர் கொச்சையான நகைச்சுவைகளை சொல்லிக்கொண்டும், வீட்டின் பின் புறத்தில் மதுபான விருந்துகளினால் நேரத்தை கழித்துக்கொண்டும், மற்றும் வீதிகளிலே வாலிப ஸ்திரீகளும், நடுத்தர ஸ்திரீகளும், இன்னும் பாட்டிமார்களும் கூட குட்டைகால் சட்டைகளை போட்டுக்கொண்டு போகிறதை காணும்போதும் மற்றும் தாய்மார்கள் ஒரு கரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு வீதியிலே போகிற கள்ளசாராயம் விற்கிறவனுடைய கவனத்தை இழுக்கிற அளவிற்கு கவர்ச்சியாக உடையணிந்து வீதியிலே நடந்து போகும் போதும் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று எப்படி அழைத்துக் கொள்கிறார்கள்? நிச்சயமாகவே அப்படிப்பட்டவர்களை தேவனுடைய சமுகத்திற்கு கொண்டு வருவதற்கு உண்மையான எந்த தேவனுடைய மனிதனையும் முகம் சிவக்கச் செய்யும். அதுசரியே. 14.மேலான அந்தஸ்துள்ளவர்களாகும்படி அநேகர் சபையிலே சேர்ந்து புத்திகெட்டவர்களாகிவிடுகிறார்கள். அந்த நாட்களில் நடந்தது போலவே இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. கல்வியோ அல்லது மத சீர்திருத்தங்களோ அல்லது எந்த ஒரு மனிதனுடைய வேதபாண்டித்தியமோ தேவனிடத்தில் நம்மை அழைத்துச் செல்லாது. ஆனால் பண்டையகால பெந்தெகொஸ்தே அனுபவமும் பரத்திலிருந்து தேவன் அனுப்பும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமே நம்மை அவரிடத்தில் திரும்ப அழைத்து செல்லுகிறதாய் இருக்கிறது. அது நம்முடைய மாம்ச சிந்தையை சுட்டெரித்து நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமான ஆபரணமாக மாற்றும். அதை செய்யும் வரைக்கும் சகோதரனே சகோதரியே, நாம் இன்னுமாக குட்டைதலை மயிர் உள்ளவர்களாயும், கவர்ச்சியாக உடுத்துகிற ஸ்திரீயாகவும் புருஷனாகவும் ஒப்பனை சாதனங்களை உபயோகிப்பவராகவும் மது அருந்துபவராகவும் புகை பிடிப்பவராகவும் இருந்துக் கொண்டு தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அதற்கு மேலானது எதையும் அவர்கள் அறியார்கள் அவர்களுடைய இருதயத்தில் மாமிச சிந்தை வேரூன்றி இருக்கிறது. நமக்கு தேவையானது என்னவென்றால், இங்கே இந்த கீழ் தளத்திலிருந்து இந்த பிரசங்க பீடம் வரை சுத்திகரிப்பு தேவையாக இருக்கிறது. ஆமென். அது சரியே. இன்றைக்கு இந்த விதமான காரியங்களுக்காக முகம் சிவக்கிற சில தீர்க்கதரிசிகளே நமக்குத் தேவை. சில சமயங்களில் ஜெபித்துக்கொள்ளும்படிக்கு ஜெப வரிசiயில் வருகிறவர்களை பார்க்கும்போது ஏதோ நடத்தைகெட்ட வீட்டிற்குச் செல்வதைப்போன்று வருவார்கள். (அது சரியே) யேசபேலைப் போன்று தோற்றம் அளித்து தேவனிடத்தில் எதையாவது கேட்கும்படி வருவார்கள். நமக்கு தேவையானது என்னவென்றால், வீட்டை சுத்தம் செய்து, பிரசங்கபீடத்தில் நின்று சரி எது, தவறு எது என்று சொல்லி பாவிகள் தரையிலே விழுந்து புரண்டு அழுது பரிசுத்த ஆவியை தேவன் அனுப்பி அவர்களுடைய ஜீவியத்தை சுத்தம் செய்கிற அளவிற்கு இருதயத்தில் அனல் மூட்டி சுவிசேஷத்தை சமரசம்பண்ணாமல் பிரசங்கம்பண்ணுகிற தேவனுடைய தீர்க்கதரிசிகளே இன்றைக்குத் தேவையாய் இருக்கிறது. ஆமென். அது சரி என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது சரியே. 15.சில நாட்களுக்கு முன்பாக 'இந்த பட்டணத்தில் இருக்கிற ஸ்திரீகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் விபச்சாரம் செய்த குற்றவாளிகளாக தீர்க்கப்படுகிறார்கள்" என்று பிரசங்கித்தேன். அப்படிதான் இருக்கிறார்கள். வீதிகளில் இருக்கும் கடைக்குச் செல்லும்போது, அரைகுறையான ஆடைகளை வாங்குவதைத் தவிர முழுமையான ஆடையை வாங்குவது மிகஅரிதாய் இருக்கிறது. இது என்னுடைய சொந்த சபையாக இருக்கிறதினால் பரிசுத்த ஆவியானவர் எதைச் சொல்லுகிறாரோ அதைப் பிரசங்கிக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது. அது சரிதான். என் சகோதரியே இதை உனக்குச் சொல்லட்டும். நான் உன்னைக் குறை கூறவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உனக்கு வேறுபட்ட காரியத்தைப் போதிக்கிறதில்லையா? அப்படி இல்லை என்றால், நீ பரிசுத்த ஆவியைப் பெறவில்லையோ என்று பயப்படுகிறேன். அது சரிதான். பரிசுத்த ஆவி என்றால் சத்தம்போடுகிறது அல்ல. ஆவியிலே நடனமாடுகிறது பரிசுத்தஆவி அல்ல. அன்னியபாஷையில் பேசுகிறது பரிசுத்தஆவி அல்ல. நீதியே பரிசுத்த ஆவியாகும். பரிசுத்த ஆவியின் எழுப்புதலாகிய, தேவன் அனுப்புகிற நீதியை, தேவனே எங்களுக்குத் தாரும். 16.மனிதன் உன்னை தவறாகப் பார்க்கும்படியாக உடை உடுத்தி தெருவிலே நடந்துசெல்லும்போது, நியாயத்தீர்ப்பிலே... ஒருவேளை நீ உன் புருஷனுக்கு முன்பாக லீலிப் புஷ்பத்தைப்போல சுத்தமுள்ளவளாய் இருக்கலாம். ஆனால் அந்த நியாயத்தீர்ப்பின்போது உன்னை அந்த நபருக்கு முன்பாக காண்பித்த விதத்தின் காரணமாக அவனுடன் விபசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்படுவாய் என்பதை உணர்ந்தாயா? நிச்சயமாக இந்தக் காரியம் ஒரு நபரை முகம் சிவக்கச் செய்யும் என்றால் அதில் வியப்பொன்றும் இல்லை. அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் வேதம் சொன்னபடியாக தேவன் ஆதியிலே மனுஷனை உண்டாக்கினது அவரை துக்கப்படுத்தினது என்று சொன்னால் அது எப்படியாக இருந்திருக்கும். ஆதிகால பேரழிவின் (antideluvian destruction) நாட்களுக்கு முன்பாக நடந்ததை தேவன் பார்த்தபோது, அவர் மனிதனை உண்டாக்கினதற்காக அவருடைய இருதயம் மிகவும் துக்கப்பட்டது. என்ன நடந்தது? தேவபுத்திரர்கள் மனுஷருடைய குமாரத்திகள் அழகாய் இருக்கிறதைக் கண்டார்கள்.அது ஒரு தாறுமாறாக்கப்பட்ட செயலாகும். அது பாலுணர்ச்சி கலந்து விட்டது ஆகும். அதே காரியம் தான் ஏதேன் தோட்டத்திலிருந்து தேவனுடைய பிள்ளைகளை வெளியே துரத்தியடித்தது. சமாதானத்தை பூமியின் மேல் கொண்டு வரும்படி தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர அதுவே காரணமாயிற்று. அதை அவர் அழிக்கும்படியாக செய்ததற்கு காரணம் அதுவே. ஸ்திரீகளும் புருஷர்களும் கலந்துபோகிற அதே காரியம் தான் சோதோம் கொமோராவை மரண கடலின் ஆழத்திற்குள் மூழ்கடிக்க காரணமாக இருந்தது. மற்றும் "அந்த நாட்களில் நடந்ததுபோல தேவ குமாரன் வருகைக்கு முன்பாகவும் நடக்கும்" என்று தீர்க்கதரிசிகளாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் உரைக்கப்பட்டது. 17.இன்றைக்கு இருக்கின்ற சபையைப் பார்க்கும்போது அவர்கள் வேதத்தில் உள்ள: ரூத், நகோமி, சாராள், போன்றவர்களை மாதிரியாக எடுத்துக்கொள்ளுகிறதில்லை. சபையிலுள்ள ஸ்திரீகளும் கூட ஹாலிவுட் மற்றும் பிசாசின் கசடுகளை மாதிரியாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறதான நம்முடைய மக்கள் அந்த பொல்லாங்கான எல்விஸ் பிரெஸ்லியினுடைய ஒலித்தட்டுகளைக் (Records) பதிவேடுகளைக் கேட்டு அவனுடைய வழியில் செல்கிறார்கள். அந்த மாதிரி பெயரை இது வரை என் வாழ்கையில் கேட்டிராத மிகவும் மோசமான பெயராகவும், பிசாசினால் பிடிக்கப்பட்டு தவறான வழியில் இழுத்துச் செல்லுகிறதொன்றாகவும் இருக்கிறது. அதே போலதான் ஆர்தர் காட்ப்ரே, மற்றும் சிலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட புத்திகெட்ட காரியத்தை உங்களுடைய வானொலியில் கேட்கிற நீங்கள், வேதத்தையும் மற்றும் சுவிசேஷ பிரசங்கங்களையும் கேட்க மறுப்பீர்கள் என்றால், கர்த்தர் தாமே உங்கள் மேல் இரக்கமாய் இருப்பாராக. எவ்விதமான ஆவியை நம்மத்தியில் கொண்டிருக்கிறோம்?. அது சரியே. நிச்சயமாகவே கர்த்தருக்கு முன்பாக அந்த தீர்க்கதரிசியின் முகம் சிவந்ததில் வியப்பொன்றுமில்லை. அது அநீதியான காரியம் என்று அறிந்திருந்தான். இந்த சம்பவத்திற்காக அவன் தேவனிடத்தில் முறையிட்டு, கர்த்தாவே "நாங்கள் அநீதியானவர்கள்" என்று சொன்னான். நாமும் கூடத்தான், நண்பர்களே. 18.அந்த இரத்தமாறுதல் நடக்கும் நிலைக்கு நாம் வருமட்டும்... உடம்பில் மேற்பூச்சு ஒட்டுப் (பத்துப்) போடுவதெல்லாம் நிறுத்திவிடுங்கள். காயத்திற்கு போடும் தைலத்தை நிறுத்திவிடுங்கள். இரத்த ஓட்டம் சரியில்லாத பட்சத்தில் சுகமானது வராது. அதனால்தான் மக்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள ஒருவர் தன்னைத்தானே எங்கேயாவது காயப்படுத்திக் கொண்டால் அது ஒருபோதும் குணமாகாது. ஏனென்றால் அந்த இரத்த அணுக்களெல்லாம் ஏற்கனவே அழிந்துபோய் இருக்கும். ஆகையால் தான் முழு சபையுமே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்படுகின்ற ஒவ்வொரு காயத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் பட்சத்தில், சுகம் வராது. சுயநலம், பேராசை, ஒழுக்கமற்ற ஜீவியம், இன்னும் தேவனுடைய பட்டியலில் தவறாக குறிக்கப்பட்டிருக்கும் பழக்கங்கள் மற்றும் எல்லா காரியத்தையும் சபை எடுத்துக் கொண்டிருக்கிறது. புருஷர்கள் குடித்தும், புகைபிடித்தும், அசிங்கமான நகைச்சுவைகளைப் பகிர்ந்துகொண்டும், ஸ்திரீகள் மயிரைக் கத்தரித்தும், முகச்சாயங்களை பூசிக்கொண்டும், மக்களுக்கு முன்பாக ஒழுக்கமில்லாத உடையை அணிந்து மற்றும் இதுபோன்று எல்லா விதமான காரியத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இவைகள் இப்படி இருக்க காரணம் என்னவென்றால் நம்முடைய எல்லா அநீதியிலிருந்து கழுவுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லாததே இதற்கு காரணம். ஆமென். இது கடினமாக தோன்றலாம். நிச்சயமாக கடினம் தான். ஆனால் இது உண்மை. நாம் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பி வெளியே வரவேண்டும். இல்லை என்றால், வருகின்ற ஒரு நாளிலே அணுகுண்டானது வெடிக்கும்பொழுது நீ அதில் அகப்படுவாய். அது ஒவ்வொரு ஆத்துமாவையும் நித்தியத்திற்கு கொண்டு செல்லும்போது அங்கே தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மட்டுமே இனம் கண்டு கொள்ளக்கூடிய தேவனை சந்திக்க வேண்டும். அந்த இரத்தத்தின் கீழாக நீங்கள் வருவதைக்காண விரும்புகிறேன். நீங்கள் தேவனோடு சரியாய் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனையாக இருக்கிறது. என்னுடைய ஆலோசனை அதுவே. 19.ஏன் நம்மால் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியவில்லை? ஏன் இப்பொழுது இருக்கின்ற சமாதானத்தைக் காட்டிலும் பெரிதான சமாதானத்தைப் பெற முடியவில்லை? ஏன் நம்முடைய ஜீவியத்தை பலமாகக் கட்டி எழுப்பமுடியவில்லை? ஏனென்றால் நாம் கால் ஆணி பிளாஸ்திரியை போட்டுக்கொண்டிருக்கிறோம், நாம் ஒட்டும் வில்லைகளை, (stickers) க் கொண்டு ஒட்டிக்கொண்டிருக்கிறோம். சிறு சிறு கட்டுகளை போட்டு (tape) சுற்றிக் கட்டியுள்ளோம். இரத்தத்தை ஏற்றுவதற்குப் பதிலாக மற்ற பொருள்களால் மூடி மறைக்கிறோம். நமக்கு இரத்தம் இல்லை. நமக்கு கிறிஸ்து இல்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். "நான் சபைக்கு செல்லுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, பிசாசு உங்கள் தோளில் தட்டிக் கொடுக்கவிட வேண்டாம். பிசாசுகூட சபைக்குச் செல்லுகிறான். அது சரியே. அவன் நிச்சயமாக செய்கிறான். அவன் தேவனிடத்திற்கு வந்தான். பரலோகத்தில் இருக்கும் சபைக்கு தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக தேவ புத்திரர்களுடன், தேவனுடைய ஒரு பார்வையாளாக அவர்களுடன் உட்கார்ந்தான். அவர், "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். "நான் பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்", என்றான். அவனும் அங்கேயிருந்தான். ஆகவே பிசாசும் சபைக்கு செல்லுகிறான். சபையில் பிசாசும் அங்கத்தினராக இருக்கிறான். பிசாசும் கிறிஸ்தவனைப் போல் நடிப்பான். அவன் வஞ்சனைக்காரன். அவன் ஒரு கிறிஸ்தவனைப்போன்று நடித்து ஒரு சபை விசுவாசியைப் போன்று செயல்படவில்லை என்றால் அவன் ஒரு வஞ்சகனாக இருக்கமுடியாது. ஒரு காரியம் வெட்ட வெளியாக கருப்பு வெள்ளை என்று தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படும் பட்சத்தில் நிச்சயமாகவே எந்த மனிதனும் வஞ்சிக்கப்பட முடியாது. கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கிற அளவிற்கு இந்த கடைசிக்காலத்தில் ஆவியானது அவ்வளவு நெருங்கினதாய் காணப்படும் என்று வேதம் உரைக்கிறது. நண்பர்களே நாம் வேதம் கூறியபடி அந்த இடத்தில் தான் இருக்கிறோம். 20.ஓ, சகோதரனே சொல்ல வேண்டுமானால், தேசமெங்கிலும் இருக்கிற தேவனுடைய தீர்க்கதரிசிகளும் பிரசங்கிமார்களும் முகங்குப்புற விழ வேண்டிய நேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் பத்தொன்பது மில்லியன் பாப்டிஸ்டு சபைகளும் (அல்ல) பத்தொன்பது மில்லியன் பாப்டிஸ்டு மக்களும், பதிமூன்று மில்லியன் மெதோடிஸ்டுகளும், பதினோரு மில்லியன் லூத்தர்களும், பத்து மில்லியன் பிரஸ்பிடேரியர்களும் இருக்கிறார்கள் என்று அறியும்போது, தேவன் தாமே இரக்கமாக இருப்பாராக... இதைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். தொடர்ந்து பந்தாட்டங்களும், பொழுது போக்குவதற்கு ஊர் சுற்றிக் கொண்டும் இருப்பதுடன் எங்கேயாவது ஓர் இடத்தில் உங்களுடைய வேதத்தை வைத்துக்கொண்டு இத்தேசத்தின் பாவத்திற்காக ஜெபிப்பதற்குப் பதிலாக, புதன் இரவுகளிலும் சில சமயங்களில் ஞாயிறு இரவுகளிலும் தொலைக்காட்சியைக் காணவும் வானொலியில் ஜாக்ஸ், காக்ஸ் இசையை மற்றும் ஹாலிவுட் நகைச்சுவைகளைக் கேட்கவும் வீட்டில் தங்கிவிடுவதையும், உங்கள் ஆத்துமா அவ்விதமான காரியங்களில் வளரும்படி விடுவதற்காக உங்களுடன் சேர்ந்து நானும் குற்றமுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய சிந்தையில் இப்படியாக தீர்மானித்திருக்கிறேன். தேவனுடைய உதவியினாலும் கிருபையினாலும், தேவன் எனக்கு பெலனைக் கொடுப்பாரென்றால் மரணம் என்னை விடுவிக்கும் வரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர்ந்து உந்தித்தள்ளி முன்னேற தீர்மானித்திருக்கிறேன். தேவன் தாமே இதைச்செய்யும்படிக்கு எனக்கு உதவியாக இருப்பாராக. எனக்கு "உதவி செய்யும்" என்று கேட்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. அவர் செய்த கிரியைகளையும், காரியங்களையும் நானும் கண்டு இருக்கிறேன், நீங்களும் கண்டு இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுதோ பின்மாற்றம் அடைந்து ஆவிக்குரிய ரத்த சோகை ஏற்பட்டுள்ளது. 21.நிச்சயமாகவே, இந்த கூடாரமானது இந்த இடத்தின் ஒரு மூலையில் சிறு கான்கிரீட் கட்டிடமாக இருந்த நிலையிலிருந்து தேவன் தேசத்திற்கு முன்பாக உன்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்று முழுஉலகமும் அறிந்ததொன்றாகும். அதுசரியே. "கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது தேவனுடைய பெட்டியோ திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே" என்று ஓர் இரவு தாவீது சொன்னதை நினைக்கத்தோன்றுகிறது. "அவருக்கு ஒரு வாசஸ்தலத்தைக் கட்டுவேன்" என்று சொன்னான். அதற்கு நாத்தான் தீர்க்கதரிசியோ, "நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும் "கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே", என்றான். அந்த இரவு தேவன் நாத்தானுக்குத் தோன்றி "நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி", தாவீதே நீ எங்கிருந்து வந்தாய்? "ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்" என்றார். இங்கே இந்த கூடாரம் சிறியதாய் இருந்தபோது எத்தனை பேர் இங்கு இருந்தீர்கள்? இது ஒரு சிறிய பழைய ஒதுக்கி வைக்கப்பட்ட, உதைத்து எட்டாவது பென் தெருவில் ஒரு மூலையில் தள்ளப்பட்டு, மற்றும் ஜெபர்ஸன்விலில் இருக்கிறவர்கள் வருவதற்கும் கூட அறிந்திராத ஒரு இடமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றோ, தேவன் தம்முடைய இரக்கத்தினாலே உங்களைத் தூக்கி எடுத்து பெரிய மக்களாக மாற்றி இருக்கிறார். இந்தியாவிலுள்ள பம்பாயிலிருக்கும் மக்கள் இந்த கூடாரம் இங்கே அமைந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறார்கள். டெல்லி, இந்தியர் மற்றும் எல்லா தேசங்களும், ஆப்பிரிக்காவில் இருக்கும் மக்களும் இந்த இடத்தை அறிந்திருக்கிறார்கள். இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், ஐரோப்பா, ஆசியா எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இன்னும் தீவுகளிலும் அறிந்திருக்கிறார்கள். அங்கேயுள்ளவர்கள் இதைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள். தேவன் தாமே நம்மை மக்களுக்கு ஓர் உதாரணமாக வைத்திருக்கிறார். இவ்வளவாக தேவன் நமக்குச் செய்ததை சிந்தித்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில் பார்க்கும்போது நாமோ உலகத்தின் காரியத்தில் காலத்தை கழித்துக்கொண்டு ஆவிக்குரிய ரத்தசோகையாக மாறிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்படியாக மலைமேல் வைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் போலவும், மறைக்க முடியாத மெழுகுவர்த்தியைப் போலவும் இருக்கவேண்டும் ஓ தேவனே‚ உங்களைப்போலவே நானும் குற்றவாளியாக நிற்கிறேன். எனக்கு என்ன தேவை என்றால், கக்கத்தண்டத்துடன் புருஷர்களும், ஸ்திரீகளும் இந்த வாசலுக்குள்ளாக பிரவேசித்து திரும்பிச் செல்லும்போது, அதெல்லாம் இல்லாமல், நடந்துபோகிற அளவிற்கு மக்களை அழைத்து தேவன் பக்கமாகத் திருப்புகிற தேவனால் அனுப்பப்பட்ட அந்த பண்டையகால மனந்திரும்புதலே எனக்குத் தேவையாக இருக்கிறது. ஒரு குருடன் உள்ளே வழி நடத்தப்படும்போது அவன் கண் பார்வை அடைந்தவனாய் கடந்து செல்லவேண்டும். செவிடாக உள்ளே வந்தவர்கள் சுகமடைந்தவர்களாக வெளியே செல்லவேண்டும். பாவிகள் கீழ்தரமான மோசமான பாவத்தோடு வரும்போது ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்வார்களா...? நாம் அதைச் செய்வோமா? 22.இஸ்ரவேலர்களை தேவன் அழைத்து அவர்களை ஒரு உதாரணமாக வைத்திருந்தார். நம்மையும் தேவன் அழைத்து ஒரு உதாரணமாக வைத்திருக்கிறார். ஆனால் நாமோ தேவனை ஏமாற்றமடையச் செய்தோம். அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைக்கும்போது அது நம்மையும் கூட அவருடைய சமூகத்தில் முகம் சிவக்கச் செய்கிறது. அவர் எப்படியாய் நம்மை ஆட்டு கொட்டிலிலிருந்து தூக்கி எடுத்து உலகம் முழுவதும் நம்மை அறியும்படி செய்தார். அவர் நமக்கு மகத்தான காரியத்தைச் செய்திருக்க, நாம் இன்னுமாக உலகத்தோடு கலந்து நேரத்தைகழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு இன்னும் அந்த உத்தமம் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மிடத்திலே இப்பொழுது போதுமான ஜெபம் இல்லை, நடக்க வேண்டிய நிதானத்தில் காரியங்கள் நடக்கிறதில்லை. சிறு சிறு கூட்டங்களை நடத்தி ஆணி பிளாஸ்திரியைப் (Corn Plaster) போட்டு சுலபமாக வலியை ஆற்ற முயற்சி செய்கிறோம். ஆனால் சுகப்படுத்தும் சத்துள்ள ஊட்டமுள்ள நல்ல இரத்தம் அங்கே வரும் வரைக்கும் அந்த வலியை சுலபமாக நீக்கிவிடமுடியாது. அது சரியே. நீங்கள் சர்க்கரை வியாதி உடையவராக இருந்து உங்கள் பாதத்தில் உள்ள கால் ஆணி போன்ற பாகத்தை அறுத்து எடுப்பீர்களானால் அவர்கள் உங்கள் பாதத்தையே வெட்டி அகற்றும்படி அது செய்துவிடும். இதை விட்டு விடுவேன், இதை தாண்டி செல்லுவேன், ஒரு ஆணி பிளாஸ்திரியை போடுவேன் என்று முயற்சி செய்யாதீர்கள். செய்ய வேண்டியதெல்லாம் தேவனுக்கு நேராக வந்து, "தேவனே, நான் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய எல்லா பாவங்களையும் நீக்கும்படி கழுவுகிற உம்முடைய இரத்தமே எனக்குத் தேவை", என்று சொல்லுங்கள். அதுவே எனது ஜெபமாய் உள்ளது. உங்களுடையதும் அதுவே என நம்புகிறேன். இந்தக் காரியத்தைக் குறித்துச் சிந்தியுங்கள், நண்பர்களே. 23.இன்றிலிருந்து ஐம்பது வருடங்கள் கழித்து நடக்க இருக்கிற காரியம், பார்ப்பதற்கு இந்நாள் ஒன்றில் காலை விடியும் முன்பதாகவே நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதைப்போன்று காணப்படுகிறது. ஒரே ஒரு ஏவுகனை வெடிகுண்டு, ஒரே ஒரு கோபால்ட் அல்லது ஹைட்ரஜன் குண்டு போதும். இப்பொழுது முழு தேசமும் எச்சரிப்பிலிருக்கிறது. செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்களானால், அந்த பறக்கும் தட்டைக் குறித்துப் பதில் கொடுக்குமாறு பென்டகனிடம் கோரப்பட்டிருந்தது. நீங்கள் நினைக்கிற மாதிரி அது ஒரு கற்பனையோ, அல்லது கட்டுக்கதையோ அல்ல, அது உண்மையானதொன்று. அது புலனாய்வு செய்கிறதாக இருக்கிறது. அவை போர் வரிசையில் பறக்கின்றது. அவைகளால் தப்பிப்போக முடியும். அவைகளால் துல்லியமாக கண்டுபிடித்துச் சரியாகச் சொல்லமுடியும். அவைகள் புலனாய்வு செய்கிறவை. அவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள். மக்கள் அதைக்கண்டு நகைத்து "பறக்கும் தட்டா" என்று சொல்லி கேலி கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? தான் வருவதற்கு முன்பாக வானத்திலே அடையாளங்கள் தோன்றும் என்று இயேசு சொன்னார் அல்லவா. அவர் சோதோம் கொமோராவை அவர்களுடைய அசுத்தமான பால் உறவு நடவடிக்கையின் காரணத்தினாலே அழிப்பதற்கு முன்பு விசாரணை செய்யும்படி தூதர்களை அனுப்பினார் அல்லவா. அதேபோல் இந்த கடைசி சில வருடங்களில் தூதர்கள் இப்பூமியின் மேல் வந்திருக்கிறார்கள். மக்கள் மத்தியிலே அவர்கள் காணப்பட்டார்கள். அதாவது உண்மையாகவே இரத்தத்தினால் கழுவப்பட்ட உத்தம மக்கள் அதை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே நின்று புகைபடங்களை எடுத்தார்கள். அது சரியே. நட்சத்திரம் மின்னுகிறதை மூடுகிற அளவிற்கு பாவமானது குவிந்திருக்கிறதை விஜயம்செய்து பார்த்த தூதர்கள், இந்த அறிக்கையை பிதாவினிடதிற்க்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். சந்திரனும் இந்த முழு உலகமும் இரவிலே ஒரு குடிகாரன் வருவதைப்போன்று தள்ளாடுகிறது. அது சரியே. 24.கிறிஸ்தவர்கள் மத்தியில், தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பார்க்கும்போது அவர்கள் பேர் புகழ்ச்சிக்காக சேஷ்டபுத்திர பாகத்தையே விற்றுப்போட்டார்கள். சமுதாயத்தில் பெயரெடுப்பதற்காக ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தை மாற்றிப்போட்டார்கள். கல்விமான்களிடையே பிரசங்கிப் பதற்காக பண்டையகால இரத்தத்தினால் கழுவப்பட்ட சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை விட்டு மக்களிடையே புத்திசாலித்தனமாகப் பிரசங்கித்து, புத்திசாலித்தனமாகப் பேசி சுவிசேஷத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அநேகர் தங்களுடைய சுய ஆதாயத்துக்காக சுவிசேஷ களத்தில் இறங்கி சுவிசேஷத்தை தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். இது நிமித்தம் அநேகர் சம்பாதித்திருக்க வாய்ப்பில்லாத பெரிய பண்ணைகளையும், கார்களை பெற்றிருக்கிறார்கள்.இதுவே சுய ஆதாயம். ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. அப்படியில்லாமல் மீதியானவர்கள் இன்னும் இருப்பதற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எஸ்றாவின் நாட்களில், அவன் அழுது, பாவத்தைக் கண்டித்து வெளியே மக்களை அழைக்கத் துவங்கினபோது என்ன நடந்தது தெரியுமா? தேவனை விசுவாசித்த, தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் அவன் பக்கமாய் வந்தார்கள். உங்களுடைய சபையிலே உங்களுடைய பிரசங்கிமார்கள் பாவத்தைப்பாவம் என்று பிரசங்கித்து வெளிப்படுத்திக் கண்டிப்பார்களானால், உண்மையான தேவனுடைய மக்கள் உங்களைச்சுற்றி வந்து அவர்களோடு தரித்திருப்பார்கள். அது சரியே. ஒரு காரியத்தை அது உள்ளவாறே விவரித்து, சரியானதையும் தவறானதையும் பிரித்துச் சொல்லக்கூடிய நேரத்தில் நாம் இருக்கிறோம். தேவனே‚ இதை செய்யும்படி எங்களுக்கு தைரியத்தை அருளும். அப்படி செய்யும் போது என்ன நடக்கும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள். 25.இந்த காலையில் நான் சொன்ன வண்ணமாக (அல்ல) யாரோ ஒருவர் என்னிடத்தில் சொன்னார் என்று நினைக்கிறேன், அதாவது நம்மை கண்காணிக்கிறவைகளில் ஒன்றானது வெடிகுண்டு (அல்லது) வரப்போகிற விமானம் (அல்ல) அதை என்ன கூறுவார்கள் என்று மறந்துவிட்டேன். எங்கிருந்தோ வந்த ஒரு கப்பல்படையை சமீப காலத்தில் அழைத்தார்கள். அது முன்னூறு ஜெட் போர் விமானங்களையும் அவைகளின் அடிபாகத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் வெடி குண்டுகளையும் உடையதாக இருந்தது. சமீப நாட்களில், ஷ்ரிவேபோர்டில் இருக்கும் ஒரு பெரியவிமான நிலையத்தில் பணிபுரிகிற ஒருவன் சகோ. ஜாக்ஸ் அவர்களின் கூட்டத்தில் மனந்திரும்பினான். அவன் "அந்த அணுகுண்டுகள் எல்லாம் சரியாக அதன் தாங்கிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது" என்று சொன்னான். "அவைகள் எல்லாம் சரியாக அந்த விமானங்களில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. மற்றும் அதிலே நாங்கள் தினமும் சென்று பயிற்சி செய்வோம்" என்றான். "உனக்கு பயமில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அதிலே அந்த விசையிழுப்பு இல்லை, இருப்பினும் நாங்கள் மிகவும் எச்சரிப்போடு இருக்கிறோம், ஏனென்றால் ஒரே ஒரு நிமிடத்தின் இடைவெளியில் அறுபது நொடிகளுக்குள்ளாக விசையிழுப்பைமாட்டி, எரியூட்டி, சடுதியிலே இங்கிலாந்திற்கு அவைகள் பறந்து செல்ல முடியும்" என்றான். 26.சமுத்திரம் எங்கிலும் அவர்களுடைய பெரிய குண்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. "தைரியம் இருந்தால் ஒரே ஒரு வெடிகுண்டை போட்டுப்பாருங்கள். ஒரே ஒரு அணுகுண்டை ஐக்கிய நாட்டின்மேல் அல்லது ஏதோ ஒரு இடத்தில்போட்டு என்ன நடக்கும் என்று பாருங்கள்;". எப்படி இருக்கும் தெரியுமா? உடனடியாக ரஷ்யாவின் மேலாக தாக்குதல் நடக்கும். அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் போட்டு தாக்கும்போது, உடனடியாக தொடர் தாக்குதல் நடத்தி ஒரு வைக்கோல் குவியல் எரிவதைப் போன்று எரிந்து முழுபூமியையும் எரித்து உருக்கிவிடும். இந்த காரியமானது வேதத்தோடு சிறிதும் முரண்பாடாக இல்லை என்று அறிவீர்கள், "பூமியானது வெந்து உருகிப்போம், வானமும் அதினோடு வெந்துபோம்". பூமியின் அணுக்களெல்லாம் அழிந்துபோம். ஒரு அபாயகரமான நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். உலகிலுள்ள மனிதர்களின் பெரிய மனிதர்கள் மரணபயத்தோடு ஜீவிக்கிறதான நாட்களில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அவர்களில் யார் முதலாவது வெடிகுண்டைப் போடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். முதலாவது ஒரு குண்டு போடப்படும். அதைத் தொடர்ந்து எல்லாமே தொடர்ச்சியாக நடக்கும். 27.ஆனால் கிறிஸ்தவனுக்கோ இந்த உலகத்தில் அது மிகுந்த சந்தோஷமான நேரமாக இருக்கவேண்டும். ஏனென்றால் காலம் மாறிப்போகப்போகிறது. வயதானதெல்லாம் வாலிபமாக மாறப்போகிறது. ஓ என்னே! மரணமும் பறந்து ஓடிப்போகப் போகிறது. வியாதி என்பதே இனி இருக்காது. வியாதியஸ்தருக்காக ஜெபக்கூட்டம் இருக்காது. இழக்கப் பட்டவர்களுக்காக ஜெபக்கூட்டம் தேவை இருக்காது. தேவன் பூமியின் நான்கு காற்றின் முனையிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தம்முடைய செட்டைகளுக்குள்ளாகக் கூட்டிச் சேர்ப்பார். அதன் பின் அவருடைய பரத்திலே, அவரோடு ஜீவித்து என்றென்றைக்குமாய் ஆட்சி செய்வோம். ஓ‚ சகோதரனே, சகோதரியே என்னுடைய நண்பனே, இன்றிரவு நீ ஆயத்தமாக இல்லாமல் இருப்பாய் என்றால், இந்த நேரத்தில் நீ ஆயத்தமாகுவாயாக. இந்த இரவின் பொழுதில் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி உனக்கு அழைப்புக் கொடுக்கிறேன். வேறுபட்டிருக்கிறவர்களே, நீங்கள் தேவனோடு இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்று அறிந்திருக் கிறவர்களே என்னோடுகூட இந்த பீடத்தண்டையில் வரும்படிக்கு உங்களுக்கு அழைப்புக் கொடுக்கிறேன். இங்கிருக்கிற ஒவ்வொருவரையும் இங்கே வரும்படி அழைப்புக் கொடுக்கிறேன். இங்கே வருவது மாத்திரம் அல்ல, தேவனல்லாத எல்லாவற்றையும் உங்களுடைய ஆத்துமாவிலிருந்து சுத்தம் செய்து, ஒரு புது நபராக மாறும்மட்டும் இங்கேயே தரித்திருங்கள். ஏதோ பிளாஸ்திரி போட்டுக்கொண்டுபோவது அல்ல, ஆனால் உங்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, புதிய ஜீவனையும் புதிய நம்பிக்கையையும், கொடுக்கிற அந்த இரத்த மாற்றத்தைப் பெற்றுக்கடந்து செல்லுங்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தோடு கடந்து செல்லுங்கள். உரக்க சத்தத்தோடும், நடனத்தோடும் போவதல்ல. அதெல்லாம் சரிதான். அவையெல்லாவற்றையும் சபையிலே கொண்டிருக்க வேண்டியது தான் அவைகள் வேதத்திலும் இருக்கின்றன. ஆனால் நான் பரிசுத்த ஆவியைக் குறித்துப் பேசுகிறேன். அதுவே தேவனுடைய அன்பாக இருக்கிறது. 28.ஒரு நாளில் ஒரு வாலிப பையன் என்னோடு பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய தாயார் ஒரு அன்பான ஸ்திரீ. அவளை ஒரு முறை அல்லது இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவள் அவனிடத்தில், "ஓ தேனே‚ இங்கு வா, நீ இதை கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய கையில் எண்ணெய் இருக்கிறதை கவனித்தாயா? என்றாள். (நானும் கூட, அதை குறித்துதான் இவ்வளவாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்) அவளோ "என் கையில் எண்ணெய் இருக்கிறதைக்குறித்து என்ன நினைக்கிறாய்?" என்றாள். அதற்கு அந்த வாலிபன் தன்னுடைய தாயாரைப் பார்த்து "அம்மா நான் உங்களிடம் ஒன்றுகேட்க விரும்புகிறேன்". அவளோ, தான் தேவனிடத்தில் நெருங்கி நடக்கும்படி அவன் அவளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்பினாள். அதற்கு அவன் "உம்முடைய கரத்தில் எண்ணெய் வடிகிறதின் நிமித்தம் உங்களை அது ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்புவித்ததா?" மற்றும் அது தேவனோடு ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுத்ததா? என்று கேட்டான். "இல்லை" என்று சொன்னாள். 'அப்படியென்றால் நான் அதை பொருட்படுத்தாமல், அதை அப்படியே விட்டுவிடுவேன்" என்றான். அது தான் காரியம். ஓ, இந்த உலகம், பக்தி சம்பந்தமான உலகம் பெந்தெகொஸ்தே மக்கள் ஒரு மதவெறியான காரியங்களையே சார்ந்து இருக்கிறார்கள். கல்வி கற்றவர்கள் என்று அழைக்கப்படுகிற உலகம், ஸ்தாபன உலகமானது இன்னும் பத்து லட்சம் அதிக அங்கத்தினர்களைக்திரட்டி அவர்களுடைய ஸ்தாபனத்தில் இன்னும் சற்று சிறப்பாக இருக்கும்படி ஓர் தீர்வை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தேசங்கள் கூட, முழு உலகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்துவதற்கு ஏற்றார்போல் ஒரு காவல் படை ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சகோதரனே, இது பெந்தெகொஸ்தேயினடைய உணர்ச்சிகளினால் வராது, அல்லது பிராடஸ்டன்ட் ஸ்தாபனத்தினாலோ, கத்தோலிக்க தலைமைக்குரு மூலமாகவோ வராது. பென்டகன் மூலமாகவோ அல்லது வேறொரு புதிய காரியத்தை செய்கிறதினாலோ வராது. அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால், இயேசு கிறிஸ்துவுக்கு ஜீவியத்தை ஒப்புக்கொடுப்பதின் மூலமாக மாத்திரம் வரும். அதற்கு நிகராக கொஞ்சம் குறைந்தாலும் தவறாக இருக்கும். நாம் ஜெபிக்கலாம். இந்த நேரத்தில் இசைக்கருவியை வாசிக்கும்படியாக நம்முடைய சகோதரியை கேட்டுக்கொள்ளலாம். 29.நாம் ஜெபிக்கிறதான இந்நேரத்தில், எல்லோரும் தலை வணங்கி இருக்க, ஒவ்வொருவரும் ஜெபித்து கொண்டிருக்க, தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களுடைய ஆவியை சோதித்துப்பார்ப்பீர்களா என்று வியக்கிறேன். நீங்கள் சரியாக இருக்கிறீர்களா? இந்த ஆராதணைக்குப்பிறகு, உங்களிடத்தில் ஏற்கனவே கூறினபடியாக என்னுடைய மாமியார் மரிக்கும் தருவாயில் இருக்கிறார்கள். நான் அவரைச் சென்று பார்க்க வேண்டும். அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் இருந்து நான் சந்தித்த என் நண்பர்களாக நான் அறிந்துள்ளவர்கள் மரணத்தருவாயில் படுத்திருக்கிறார்கள். ஓ, சகோதரனே, சகோதரியே நீங்களும் அதே இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒருநாளில் நீங்களும் அந்த இடத்திற்கு வந்தேயாக வேண்டும். இப்படியாக "சரி சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் அதை அறிந்திருக்கிறேன், ஏதாவது ஒரு நாளில் நான்அதை சரிபடுத்திக் கொள்வேன்" என்று சொல்லலாம். ஆனால் ஒருவேளை வேறொரு நாள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். இன்றைய தினம் மாத்திரமே உங்களுக்கு இருக்க கூடும். அந்த கலிபோர்னியாவிலிருந்து மிக்ஷிகனுக்கு தன்னுடைய மனைவியோடு கார் ஓட்டிக்கொண்டு புதிய வீட்டிற்கு போகும்போது அந்த மனிதனுக்கு அந்த விதமாக நடக்கும் என்று எவ்வளவு குறைவாக அவன் அறிந்திருந்தான். சமீபத்தில் தான்; அவன் கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தான். அந்த காலை நேரத்தில் சுற்றுலா பயனிகளுக்கான விடுதியிலிருந்து கிளம்பின போது, இன்னும் சற்று நேரத்தில் தன்னுடைய மனைவியும் குழந்தையும் பிணமாகப் போகிறார்கள் என்று எவ்விதம்அறிந்திருக்கக் கூடும்? அந்த ஹென்ரிவைல் மேலே அவர்களுடைய காரானது வந்தபோது ஒரு பஸ்மோதி கிட்டத்தட்ட அந்த ஓட்டுநர் பஸ்சை ஆயுதங்கள் பாய்வது போன்று அநியாயமாக அவனுடைய வாகனத்தின் மீது மோதினான். அது அந்த ஸ்திரீயையும் சிறு பெண்னையும் கொன்று போட்டது.அவர்களுடைய ஆத்துமா சரியாக தேவனிடதில் இருக்கிறது என்று நம்புகிறேன். 30.சில வாரங்களுக்கு முன்பாக ஒரு விமானம் விழுந்தது என்று கேள்விப்பட்டு நானும் சகோதரன் வுட்ஸ் அவர்களும் அதைப் பார்க்கும்படி சென்றோம். அங்கே சிதறிக் கிடந்த எட்டு நபருடைய சடலங்கள் தலை, கால் மற்றும் கையை தனித் தனியே பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். பொறுக்கிக் கொண்டிருந்ததில், சிக்காகோவிலிருந்து பிரசித்தி பெற்ற அருமையான ஒருவருடைய சடலத்தை எடுக்கும் போது அவருடைய உள்ளுறுப்புகள் எல்லாம் கீழே விழுந்திருந்தது. அவன் அந்த காலையில் விமானத்தில் ஏறின போது, முந்தைய இரவு சபைக்குச் சென்றிருந்தபோதுஅவனுடைய நோக்கம் சரியாக இருந்ததா என வியக்கிறேன். அந்த சபையின் போதகர் பீடத்தண்டை அழைப்பு கொடுத்திருப்பாரா? அவர் பாவத்தை கடிந்து கொண்டாரா?அப்படியென்றால் அந்த மனிதன் அந்த வாய்ப்பை பயன்படுத்தினாரா அல்லது ஒரு மிருகத்தைப் போன்று வெளியே கடந்து சென்று விட்டாரா? அல்லது தேவனுடைய பார்வையில் அவன் தேவனுடைய குமாரனா? இந்த காரியங்களைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள் நண்பர்களே! அவைகள் எல்லாம் முக்கியமானவைகள். அவைகள் முக்கியம் மாத்திரம் அல்ல, அவைகளே இந்த மணி வேளையில் மிகவும் முக்கியமான காரியமாக இருக்கிறது. இது உங்களுடைய மனதில் தீர்மானிக்கிற நேரம். இனி வரப்போகின்ற ஜீவியத்திற்கு இந்த ஜீவியத்தில் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் இதுவே. நாம் ஜெபிக்கிற நேரத்தில் நீங்கள் இதைச் செய்வீர்களாக. 31.பரலோகப் பிதாவே, பாவத்தையும் அதைசெய்து அறிக்கையிடாதவர்களையும் குறித்து வேதம் சொன்னதை நாங்கள் வாசித்திருக்கிறோம் தேவனை அறியாமல் மரிப்பது என்னவாக இருக்கிறது என்று நாங்கள் உணருகிறோம். காலத்தை கடத்தினவர்களையும், தேவனைப் பெற்றுவிட்டோம் என்று சொல்லி, பெறாமல் இருந்தவர்களையும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கிறிஸ்தவர்கள் போன்று நடித்தவர்களும், அவர்களுடைய ஜீவியம் எவ்விதமாய் நிரூபித்தது என்று மற்றும் அவர்களுடைய மரணம் அதை பிரத்தியட்சபடுத்தினது என்றும் எங்களுடைய அனுபவத்திலே அறிந்திருக்கிறோம். இப்பொழுதும் பிதாவே, இன்று இரவு இங்கிருக்கிற ஒவ்வொரு இருதயத்தோடும் பேசும்படியாக ஜெபிக்கிறேன். நானும் ஆண்டவரே, அநேக காரியங்களில் கால தாமதமாக இருந்ததும் செய்திருக்கவேண்டிய அநேக காரியங்களை செய்யாமல் இருந்ததும் என்னுடைய தவறை அறிக்கையிடுகிறேன். இந்த மக்களுடைய தவறுகளை அறிக்கையிடுகிறேன். இந்த தேசத்தின் தவறுகளை அறிக்கையிடுகிறேன். ஆண்டவரே, நீர் இரக்கமாய் இருக்கும்படிக்கு கேட்கிறேன். நான் வளர்க்கும்படி எனக்கு மூன்று சிறிய பிள்ளைகள் உண்டு. இதோ நாங்கள் இந்த மோசமான இடத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். தேவனே, இங்கிருந்து தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். தேவனே நான் உம்மோடு சரியாய் இருக்க விரும்புகிறேன். அணுகுண்டு எங்களை தாக்கவில்லை என்றால், ஏதோ ஒரு நாளில் ஏதாவது ஒரு அழிவு எங்களைக் கொண்டு செல்லலாம். ஒரு வேளை அழிவு கொண்டு செல்லவில்லை என்றால், ஏதாவது வியாதி கொண்டு செல்லும், ஏதாவது ஒன்று எங்களைக் கொண்டு சென்றாக வேண்டும். ஆனால் இவைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடியவழி ஒன்று உண்டென்பதை அறியும்போது மிகவும் சந்தோஷம் அடைகிறோம். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்". தேவனே இன்றிரவு பாவியாகிய நண்பனோ, பையனோ, பெண்னோ, அல்லது புருஷனோ, ஸ்திரியோ அந்த திறக்கப்பட்ட வாசலைக்கண்டு கிறிஸ்துவுக்குள் ஓடிவருகிற தருணமாக இந்நேரம் இருப்பதாக. 32.இப்பொழுது நம்முடைய தலையை தாழ்த்தி இருக்கிறதான வேளையில் "என்னுடைய ஜீவியத்தை குறித்து வெட்கப்படுகிறேன். (நிச்சயமாகவே அப்படி சிலர் இருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறேன்) என்று சொல்லுகிறவர்கள் தேவனிடத்தில் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? என்னுடைய தவறுகளை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு இரக்கத்தைக் கோரப்போகிறேன்" என்று சொல்லுகிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை தேவனிடத்திற்கு உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேகராய் இருக்கிறீர்கள். அங்கேயும் கூட அநேகர், ஆம், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே இருக்கிற அநேகர், அநேக நாட்களாக கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொல்லி தேவனோடு சரியாய் இருக்கத் தவறினதை அறிந்திருப்பீர்களானால், மற்றும் செய்யக்கூடாத காரியத்தை தற்போது செய்கிறதை அறிந்தும் அறிக்கையிடாமல் கடந்து சென்று அலையிலே மிதக்கிறதைப் போன்று தளர்வாக விட்டுவிட்டு, பார்க்கக் கூடாத நிகழ்ச்சிகளைப் பார்த்தும், பார்க்கக்கூடாத பத்திரிகைகளைப் பார்த்தும், கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதாக இராத, படிக்கக்கூடாத புத்தகங்களைப்படித்து, மற்றும் கேட்கக்கூடாத இழிவான, தவறான அசிங்கமான மற்றும் கீழ்தரமான நகைச்சுவைகளைக் கேட்டு, ஸ்திரீயும், புருஷனும் இருபாலருமே அப்படிச் செய்தீர்கள். பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருந்ததை அறிந்து, அதைத் தள்ளிப்போட்ட பாவத்தின் நிமித்தம் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படுகிறீர்கள். அப்படியாக உங்கள் கரத்தை கிறிஸ்துவுக்கு நேராக உயர்த்தி இரக்கமாய் இருந்து, உங்களை மன்னிக்கும்படி கேட்பீர்களா என்று, வியக்கிறேன். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். வாலிப ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 33.இதோ இந்த பீடத்தண்டையில் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்யும்படி ஒரு ஸ்திரீ வந்து கொண்டிருக்கையில்... தேவனுக்கு நேராக கரத்தை உயர்த்து. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியானது. திருவாளர் அவர்களே. அது சரியே. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் தவறு செய்தீர் என்று அறிந்திருக்கிறீர். இந்த இரவிலே என்னைச் சந்திக்க இந்த பீடத்தண்டையில் வர உமக்கு தைரியம் உண்டோ என்று வியக்கிறேன். நாம் இங்கே சுற்றி முழங்கால் படியிட்டு "தேவனே எங்கள் எல்லோர் மேலும் இரக்கமாய் இரும். எங்களுக்கு நீர் தேவையாக இருக்கிறீர்" என்று சொல்லலாம். சீமாட்டியே தேவன் உன்னைஆசீர்வதிப்பாராக. வாலிப ஸ்திரீகள் தங்களுடைய ஜீவியத்திற்காக அழுது கொண்டு வருவதைக்காணும்போது, அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பாதையின் சந்திப்பில் இருக்கிறார்கள் என்று அறிகிறோம். அவர்கள் சூழ்நிலையின் காரணத்தினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். முதியோர்களே, நாம் சிறுவர்களாக இருந்தபோது இருந்த சோதனைகளைப் பார்க்கும் போது நம்முடைய பையன்கள் பத்துமடங்கு அதிகமாக சோதனையை அனுபவிக்கிறார்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா? சகோதரியே, நீ சிறு பெண்ணாக இருந்தபோது இருந்த சோதனைகளைக் காட்டிலும் உன்னுடைய பெண்பிள்ளை பத்து மடங்கு அதிகம் சோதிக்கப்படுகிறாள் என்று உணர்ந்திருக்கிறாயா? அப்படியென்றால்அவளுடைய குமாரத்திக்கு எப்படிப்பட்ட சோதனைகள் இருக்கும்? பிசாசு வண்ணம் தீட்டிவிட்ட காட்சியை கவனித்துப் பாருங்கள், ஓ‚ நாம் எப்படியாக ஜெபிக்கவேண்டும். சகோதரனே, இப்பொழுது உங்களிடத்திற்கு திரும்பவுமாக வரலாம். நம்முடைய பிதாக்கள் ஜெபத்தில் பாதி அளவு கூட நாம் ஜெபிக்கிறதில்லை என்று உணருகிறீர்களா? மேய்ப்பர்களே, நமக்கு முன்பாக இருந்த மேய்ப்பர்கள் முழங்காலிலே நேரத்தைச் செலவிட்டதைப்போன்று நாம் செய்வதில்லை என்று அறிவீர்களா? ஸ்திரீகளே, உன்னுடைய தாயார் உன்னுடன் இரவு நேரத்தில் ஜெபித்து உனக்கு போதித்த வண்ணமாக உன் மகளுக்கு செய்கிறதில்லை என்று உணருகிறாயா? அப்படியென்றால் அவர்கள் இப்பொழுது இப்படி இருப்பதைக் குறித்து என்ன? இதற்கு யார் குற்றவாளி? நாமே குற்றவாளிகள். அதை மறுக்க முடியாது. நாம் தான் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறோம். நான் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறேன். நான் செய்ய வேண்டிய தேவனுடைய காரியங்களைச் செய்யவேண்டிய விதத்தில் செய்யாததின் நிமித்தம் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறேன். நான் தவறாயிருக்கிறேன் என்று அறிக்கையிடுகிறேன். தேவன் என் மேல் இரக்கமாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். 34.நான் தவறவிட்ட அநேக தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன். சிறு சிறு காரியங்களினிமித்தம், ஒன்றுக்கும் உதவாத பழைய குறைபாடான காரியத்தைப் பிடித்துக் கொண்டு அவைகளை இழந்ததின் நிமித்தம், ஒரு சுவிசேஷ ஊழியக்காரனாக உங்கள் முன்பு என்னைக் குறித்து வெட்கப்படுகிறேன். தேவனுக்கு முன்பாக நான் மனஸ்தாபப்படுகிறேன். மற்றும், தேவன் என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். சபையாரும் கூட என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். தேவனுடைய வேலையை மிகவும் மெத்தனமாக செய்ததற்காக என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். தேவனுடைய கிருபையினாலும் தேவனுடைய உதவியினாலும் இனி மேற்கொண்டு "இதை செய்யுங்கள், அதைசெய்யுங்கள்" என்று சொல்லுகிற காரியங்களுக்கெல்லாம் செவி கொடுக்கமாட்டேன். ஓவ்வொருவரும் ஏதாவதொரு காரியத்தைச் செய்யும்படி சொல்கிறார்கள் அவர்களுக்கென்று ஒரு திட்டம் உண்டு. ஆனால் அதை நீஙகள் செய்யும்படி சொல்கிறார்கள். அதெல்லாம் புத்திகெட்ட காரியம். தேவனுடைய திட்டமோ வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்று அறிந்திருக்கிறேன். இந்த சுவிசேஷத்தின் ஊழியக்காரனாக நான் மிகவும் வெட்கமடைகிறேன். ஏனென்றால் இந்நேரத்தில் ஒரு கோடி ஆத்துமாக்களைக் சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால் பத்து லட்சம் ஆத்துமாக்களையே சம்பாதித்திருக்கிறேன். மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறேன். உங்களைக் குறித்து என்ன? நீங்கள் கிறிஸ்துவினிடத்தில் வந்ததிலிருந்து எத்தனை ஆத்துமாக்களைச் சம்பாதித் திருக்கிறீர்கள்? கிறிஸ்தவம் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கடந்து செல்வதாக இருக்கிறதே. நீங்கள் கிறிஸ்தவர்களானதிலிருந்து எத்தனை ஆத்துமாக்களைச் சம்பாதித்தீர்கள்? ஆத்துமாக்களைச் சம்பாதிக்கவில்லை என்றால் குற்றவாளிகளாவே இருப்பீர்கள். அப்படியென்றால், நீங்கள் விளைச்சலற்ற நிலமாய் இருந்து இந்த சபைக்கும் இச்சுவிசேஷத்திற்கும் அவமானத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டங்களுக்கு எத்தனை பேரைக் கொண்டு வருகிறீர்கள்? அப்படி செய்யவில்லை என்றால், கிறிஸ்துவுக்கு முன்பாக வெட்கமடைந்தவர்களாக இருக்க வேண்டும். குற்றவாளிகளாக இருப்பீர்களானால் இதோ இந்த பலிபீடமே உங்களுடைய இடம். மனந்திரும்பும்படி என்னோடு கூட இங்கு வரும்படி அழைக்கிறேன். நான் என்னுடைய குற்றங்களை உணர்ந்து மனந்திரும்ப வேண்டும் என்று உணர்ந்து ஒரு நிமிடம் உங்களுடைய தலைகளை வணங்குவீர்களா? தலை வணங்குங்கள். 35.எங்கள் பரலோகப் பிதாவே, இதோ என்னை இந்த பலிபீடத்திலே தாழ்த்தி என்னுடைய நடத்தைக்காக மன்னிப்புக் கேட்கிறேன். இங்கே இந்த பலிபீடத்தை சுற்றி இருக்கிறவர்களுடைய பாவத்திற்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன். சரீரமாகிய இந்த சபைக்காகவும், இத்தேசத்திற்காகவும், சர்வதேசத்தில் இருக்கும் சரீரமாகிய விசுவாசிகளுக்காகவும் மன்னிக்கும்படி கேட்கிறேன். தேவனுடைய இராஜ்ஜியத்தின் காரியங்களில் மெத்தனமாக இருந்ததற்காக இரக்கத்தைக் கோருகிறேன். எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் மீறுதல்களை எடுத்துப் போடும்படி வேண்டுகிறேன். புத்தியீனமாய் செய்தவைகளுக்காக எங்களை மன்னிக்கும்படி கேட்கிறோம். ஓ, நாங்கள் எவ்வளவு குறைவுள்ளவர்களானோம். சரீர முயற்சியை எப்படியாய் எடுத்து வருகிறோம். எவ்வளவாயினும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்தோம். எவ்வளவாய் உமக்கு முன்பாக பாவம்செய்தோம். பிதாவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டத்தில் வேதத்தில் முகம் சிவந்த ஓர் தீர்க்கதரிசியைக்குறித்துப் பார்த்ததில் எங்களைக் குறித்து நாங்களும் முகம் சிவக்கிறோம். இதோ இந்த மக்களுடைய பாவத்திற்காக நான் உமக்கு முன்பாக முகம் சிவக்கிறேன். என்னுடைய தேசத்தின மக்களைக் குறித்து, ஆண்டவரே நான் வெட்கப்படுகிறேன். வாலிப பெண்கள் விபச்சாரிகளைப் போன்று வீதிகளில் நடந்துகொள்கிறார்கள். வாலிபர்கள் எல்லாவிதமான ஜீவியத்தை ஜீவித்து சபைக்கு வராமல் படிக்கக்கூடாத பழைய பத்திரிகைகளைப் படித்து, தணிக்கை செய்யாத நிகழ்ச்சிகளைப் பார்த்து ஹாலிவுட்டின் அசிங்கமான நகைச்சுவைகளைக் கேட்டு, பிசாசின் பழைய பூகி-வூகி இசைகளைக் கேட்கின்றனர். இந்த இசையானது ஒருவனை மோசமான காரியத்தைச் செய்யும்படி தூண்டி அவனுடைய மனசாட்சியைக் கெடுத்துவிடுகிறது. அது சாத்தானின் கைவேலைகளுக்கு அவர்களை ஊக்குவிப்பதற்கு அவன் உபயோகப்படுத்தும் ஆயுதமாய் இருக்கிறது. 36.ஓ‚ தேவனே, நான் கண்டிக்க வேண்டிய விதத்தில் கண்டிக்காததற்காக என்னைக் குறித்து வெட்கப்படுகிறேன். ஓ தேவனே, என்னுடைய குற்றத்தை நீக்கியருளும். இதைச் செய்யும்படிக்கு கேட்கிறேன். இங்கிருக்கிற மக்களை நீர் மன்னிக்கும்படி கேட்கிறேன். எங்கள் எல்லோரையும் மன்னியும். இந்த பலிபீடத்திலிருந்து புதிய புருஷர்களாகவும், ஸ்திரீகளாகவும் எழும்பிட உதவி செய்யும்படி கேட்கிறேன். ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக போகவேண்டுமோ அந்த விதமாக இங்கிருந்து கடந்து செல்ல உதவி செய்யும். இதோ எங்களை சுலபமாய் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிற பாவத்தையும் எல்லா பாரத்தையும் தள்ளிவிட்டுவிட உதவி செய்யும். எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட ஓட்டத்தை பொறுமையுடன் ஓடும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். தொலைக்காட்சியைப் பார்க்காமலும், உலகத்தின் காரியங்களைப் பார்க்காமலும், சிலுவையின் அவமானத்தால் புறக்கணிக்கப்படுவதை எங்களுக்காகப் பொறுத்துக்கொண்டவரும் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கட்டும். தன்னுடைய இரத்தத்தினாலே மக்கள் கழுவப்படும்படிக்கு எந்த விவாதமுமின்றி அவரே சிலுவையை ஏற்றுக்கொண்டார். எங்களுடைய எல்லா அநீதியிலிருந்தும் எங்களைச் சுத்திகரித்து, இன்றிரவு உம்முடைய பிள்ளையாக மாற்றி, இந்த மனந்திரும்புதலின் ஜெபத்தின் மூலமாக எங்களை ஏற்றுக்கொள்ளும். ஆண்டவரே சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எங்களுக்கு அருளும். 37.இதோ இந்த இரவின்போது எங்களுடைய படுக்கையில் படுத்து, இந்த இரவு கூட்டத்தை குறித்து சிந்தித்து கொண்டிருக்கையில் வேதமானது உலகம் எப்படியாய் இருக்கும் என்று கூறினதோ, அவைகள் வெளிப்பட்டிருப்பதைக் குறித்து சிந்தித்து பார்க்கட்டும். அதைச் சிந்திக்கிற நேரத்தில் எங்களுடைய முகங்கள் வெட்கத்தால் சிவக்கட்டும். நீர் தாமே ஒவ்வொரு இருதயத்திற்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுப்பீராக. ஆண்டவரே நாங்கள் உமக்கு முன்பாக இந்த பலீபீடத்தில் மனந்திரும்புகிறோம். தேவனே, அப்படியாக நான் தொடர்ந்து போகிற வேளையில் நீர் தாமே எனக்கு உதவி செய்வீராக. உம்முடைய சித்தமாய் இருக்கும் பட்சத்தில், விசுவாசத்தைக்கொண்டு நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, மக்களை உமக்காகச் சம்பாதிக்கும்படி செய்யும் என்று ஜெபிக்கிறேன். இதோ நான் முன்னேறிச் செல்லுகிற வேளையில் எனக்கு விசுவாசத்தையும், தைரியத்தையும் தாரும். வேறு யாரையும் நோக்கிப் பார்க்காமல், எங்கள் விசுவாசத்தைத் தொடங்குகிறவரும், முடிக்கிறவருமான உம்மை மட்டுமே பார்க்கட்டும். இதை அருளும் தேவனே. 38.இந்த சபையில் இருக்கும் ஒவ்வொரு டீக்கன்களையும் மன்னியும், மேய்ப்பரையும் மன்னியும், விசுவாசிகளையும் மன்னியும், எங்கள் எல்லாருடைய பாவத்தையும் மன்னியும், எங்களை மன்னியும் ஆண்டவரே. எங்களுடைய வாசலுக்குள் வந்திருக்கும் ஒவ்வொரு புதியவரையும் மன்னியும். இதோ அவர்கள் தாமே எங்கள் ஜீவியத்தின் மேல் இருக்கும் பரிசுத்த ஆவியின் தாக்கத்தை உணருவார்களாக. ஏனெனில் உமக்கு முன்பாக இன்றிரவு தாழ்மையோடும் எங்களுடைய முழு இருதயத்தோடும் இங்கு மனந்திரும்பினதின் நிமித்தம், நீர் எங்களை ஏற்றுக்கொண்டு வெண்மையாக்கி, பரிசுத்தமாக்கி, உம்முடைய ஊழியக்காரர்களுக்கு தாழ்மையான ஜனங்களாக மாற்றுவீராக. இந்த ஆசீர்வாதங்களை அருளுவீராக. ஆண்டவரே, இதோ எங்களுடைய இருதயத்தையும் தலையையும் தாழ்த்தி உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நான் உம்முடையவன் ஓ‚ கர்த்தாவே நான் உமது சத்தத்தைக் கேட்டேன். அது உம்முடைய அன்பை எனக்குச் சொன்னது; விசுவாசக் கரங்களில் உயர எவ்வளவாய் வாஞ்சிக்கிறேன். இன்னும் உம்மைக் கிட்டிச்சேர இன்னும் கிட்ட, கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டவரே நீர் மரித்த அந்த சிலுவையண்டையில் இன்னும் கிட்ட, கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டவரே உமது விலையேறப்பட்ட இரத்தம் வடியும் பக்கத்தண்டையில்.... 39.இங்கே அந்த பலிபீடத்தில் என்னுடைய சகோதரர்கள் மத்தியில் இந்த பலிபீடத்தில் இன்றிரவு நான் பார்க்கும்போது ஸ்திரீகள் எவ்வளவு பேரோ அது போலவே புருஷர்களும் இவ்விரவில் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் பெரும்பாலும் ஸ்திரீகள்தான் எளிதாக இருதயம் நொறுங்குண்டு போவார்கள். பெண்மைத் தன்மை இருக்கும் காரணத்தினால் அவர்கள் மிக சுலபமாய்த் தொடப்படுவார்கள். அவர்கள் சீமாட்டிகளாய் இருக்கிறதினால் சில சமயங்களில் நீங்கள் அவர்களைத் தொடமுடியும். ஆனால் பரிசுத்தவியானவர் புருஷர்களைக் கூட தொட்டு பலிபீடத்தண்டையில் அவர்களைக் கொண்டு வருகிறதைப் பார்த்து நான் அதிகமாக மகிழ்ச்சியடைகிறேன். இங்கே இப்பொழுது பலிபீடத்தண்டையில் முழங்கால் படியிட்டுள்ளவர்கள் எத்தனை பேர் "தேவனுக்காக அர்பணித்துள்ளேன்" என்று உணருகிறீர்கள். அதாவது இன்று இரவில் நீ வெளியே போகும்போது தேவனுடைய இராஜ்யத்திற்காக, அவருடைய நோக்கத்திற்காக அதிகம் செய்வேன் என்றும்; தேவனுடைய கிருபையால் மேலான வாழ்க்கையை வாழ்வேன் என்றும் சொல்லுகிறவர்கள் பீடத்தைச் சுற்றிலுமிருந்து உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? "நான் மனந்திரும்பினேன் என்பதை இப்பொழுது விசுவாசிக்கிறேன்", என்று சொல்லுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உட்கார்ந்து இருக்கும்போதே "நான் மனந்திரும்பினேன் இன்னும் தேவனுக்கு நான் நன்றாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் உணருவது போலவே நானும் உணருகிறேன்" என்று பின் பக்கத்தில் எத்தனை பேர் உணருகிறீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் எழுந்து நிற்கலாம். இந்த பலிபீடத்தண்டையில் இருக்கிறவர்கள், நீங்கள் விரும்புவீர்களானால் அந்தப் பக்கம் திரும்புங்கள், பலிபீடத் தண்டையில் இருக்கிற நீங்கள் தொடர்ந்து செல்லும்படிக்கு; இங்கே பின்னாக இருக்கிறவர்களிடம் ஜெபம் தேவைப்படுகிறது என்று சொல்லுகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நல்லது. இந்த பீடத்தண்டையின் பின்னாக இருக்கிறவர்களின் ஜெபத்தை வாஞ்சிப்பீர்களானால் கரங்களை உயர்த்துங்கள். தேவன் தாமே அதை செய்யும்படி உதவி செய்வாராக. கர்த்தராகிய இயேசு தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 40.இப்பொழுது ஞாயிறு இரவு ஆராதனையை மறந்து போகவேண்டாம். சகோ. நெவில், நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? (சகோ. நெவில் பேசுகிறார்). செவ்வாய், புதன், இரவுகளில்... அந்த ஊழிய அமைப்பு" எங்கே இருக்கிறது? மேற்குச் சந்தையில் உள்ள 1628 எண்ணில், செவ்வாய் மற்றும் புதன் இரவு கூட்டங்கள் நடைபெறும்.மற்றும் சனிக் கிழமையிலும், ஞாயிறுக் கிழமையிலும் கென்டக்கியிலுள்ள மேடிசான்வில்லில் இருக்கும் அரங்கத்தில் நான் இருப்பேன். அதன் பிறகு நியுயார்க் பகுதிக்குச் செல்கிறேன். இப்பொழுது நான் சீக்கிரமாக முடிக்கிறதற்குக் காரணம் என்னவென்றால், என்னுடைய மாமியார் மிகவும் சுகவீனராக இருந்து என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது... சகோ. நெவில் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? இல்லை. நாம் ஒரு கனம் தலை வணங்குவோம். "கர்த்தர் உங்களோடு இருப்பாராக". "தேவன் உங்களோடு இருப்பாராக" என்ற பாடலை மெதுவாகப் பாடுவேம். மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக‚ 2